கிழக்கில் இனி மதுபானசாலைகளுக்கு அனுமதியில்லை

கிழக்கு மாகாணத்தில் மது உற்பத்திசாலைகள் மற்றும் மதுவிற்பனை நிலையங்களைநிறுவ இடமளிக்கப்போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் 450 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் மது உற்பத்திச்சாலை  தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

 

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் கூட்டிணைந்து நடத்தி வரும் கிழக்கு மாகாண சபை நல்லாட்சியில் நல்ல விடயங்களே அமுலாக்கப்படும்.

 

ஸ்ரீலங்காவில் தனித்துவமான மூவின மக்களினதும் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களைப் பாதிக்கின்ற சீரழிவுக் கலாசாரத்திற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.

 

வடக்குஇ கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் சீரழிந்து போயுள்ள அதேவேளைஇ ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கலாசார சீரழிவுகளுக்கும் மதுவும் போதைப் பொருட்களும் காரணமாக இருந்து வந்திருக்கின்றது.

 

 

அதனால்தான் கிழக்கு மாகாணத்திலிருந்து மது போதையை ஒழிக்கும் போராட்டத்தை எனது தலைமையில் ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் கடந்த பெப்ரவரி மாதம் முன்னெடுத்தேன்.

 

அந்தப் போராட்டத்தை நாம் முன்கொண்டு செல்கின்ற அதேவேளைஇ ஏக காலத்தில் புதிய மது உற்பத்திச் சாலைகளையோ மதுபானச் சாலைகளையோ திறப்பதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

வடக்கு கிழக்கில் ஆயுத மோதலினால் ஏற்பட்ட அழிவுகளை விட மெல்லக் கொல்லும் நோய் என்ற அடிப்படையில் தற்போது போதைப் பொருள் பாவனை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

 

சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற கல்குடா, மற்றும் பாசிக்குடா கரையோரப் பிரதேசத்தை மையப்படுத்தி மதுபானச் சாலைகளை அமைப்பதால் இப்பிரதேசம் உலகப் புகழ் பெறப்போவதில்லை.

 

தொழிலின்றி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்ற அதேநேரம் 450 கோடி ரூபாய் செலவில் மதுபான உற்பத்திச் சாலை அமைப்பதை விட வேறு பல வளங்களைப் பயன்படுத்தும் பல்வேறு உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைத்து நமது எதிர்கால சந்ததியினரின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்’  என   அவர் தெரிவித்தார்.