கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலையில் முன்னெடுக்கப்படும் டெங்கு பரவுவதை தடுப்பதற்கான செயற்திட்ட நிகழ்வு…

நாட்டில் இன்று விரைவாக பரவி வரும் கொடூர டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் கிழக்கு மாகாண மட்டத்திலான விழிப்புணர்வு செயற்பாடு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு-பாலர் பாடசாலைக் கல்விப்பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (01) நடைபெற்றது.

இச் செயற்பாடானது கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாலர் பாடசாலைகளின் உட்புற வெளிப்புற சூழல்களையும், அங்குள்ள நீர் நிலைகளையும் முழுமையாக துப்பரவு செய்யும் நோக்குடன் பெற்றோரின் முழுமையான பங்களிப்புடன் இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது.

இச்செயற்திட்டமானது காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து முன்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் இதன் ஆரம்ப நிகழ்வானது ர்னுழு பாலர் பாடசாலையில் முன்பள்ளி ஆசிரயர் எம்.வத்சலா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் குடும்ப நல உத்தியோகஸ்தர், சமூர்த்தி உத்தியோகஸ்தர், பெற்றோர்கள், முன்பள்ளி ஆசிரியர் என பலரும் கலந்து கொண்டனர்.

மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலையில் நடைபெற்ற காரைதீவு பிரதேசத்திற்கான இச் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ்.வேல்முருகு அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ஒரு வாரத்திற்குள் ஒரு தேக்கரண்டி அளவு நீர் தேங்கியிருக்குமாயின் அல்லது ஈரலிப்பாக காணப்படுமாயின் அதில் டெங்கு நுளம்பு உருவாகுவதற்கான சாத்தியமிருப்பதாகவும், டெங்கு நோய் உருவாகுவதற்கான வீடு, முன்பள்ளி சூழலல் துப்பரவு செய்ய வேண்டிய முக்கிய இடங்ககளை அடையாளப்படுத்தியதுடன் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் விளக்கவுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் பாலர் பாடசாலை கல்விப்பணியகத்தின் கல்முனை வலயத்திற்கான வெளிக்கள உத்தியோகஸ்தர் அஷ் – ஷெய்க் ஐ.டு.ஆ.அனிஸ் அவர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு அனைத்து முன்பள்ளிகளின் சுற்றுப்புற சூழலை சிரமதானம் செய்வதன் மூலம் டெங்கு பரவுவதை குறைக்க முடியும் எனத் தெரிவித்ததுடன், இச் செயற்பாட்டை நாளாந்தம் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.