கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலய வருடாந்த ஆடி மகோற்சவ பெருவிழா

ஈழ மணி திருநாட்டின் சகல வளங்களையும் தன்னகத்தே கொண்டு நீர்,நில,மலை எழில் வளமும் கொழிக்கும் சிவ வைஷ்ணவ வழிபாட்டு தலங்கள் பலவற்றை தன்னகத்தே தாங்கி வளமுடன் திகழும் காரைதீவுப் பதியில் வர முதல்வராய் வீற்றிருந்து திரு அருள் பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஶ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய வருடாந்த ஆடி மகோற்சவ பெருவிழாவானது இன்று 14.07.2017 சுப முகூர்த்த வேளையான பி.ப 12.05 க்கு துவஜாரோகண(கொடியேற்றம்) நிகழ்வுடன் சிறப்பாக ஆரம்பமாகியது.

இவ் கொடியேற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்.

இவ் வருடாந்த மகோற்சவ நிகழ்வானது இன்று முதல் தொடந்து 09 தினங்கள் திருவிழாக்கள் இடம்பெற்று 10ம் நாளாகிய 23/07/2017 அன்று தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த ஆடி மகோற்சவ பெருவிழாவானது நிறைவடையவுள்ளது.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்