கோரக்கோயில் அகோர​ மாரியம்மன் ஆலய எட்டாம் சடங்கும்! காரைதீவு எல்கே இன் இறுவெட்டு வெளியீடும்…

கிழக்கிலங்கை சம்மாந்துறை கோரக்கோயில் தமிழ்ப்பிரிவு-02இல் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அகிலாண்டேஸ்வரி அன்னை ஸ்ரீ அகோர​ மாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சப நிகழ்வானது 28.06.2017 அன்று கதவு திறக்கப்பட்டு தொடர்ந்து ஒன்பது நாள் திருச் சடங்குகள் நடை பெற்றதனைத் தொடர்ந்து 08.072017 சனிக்கிழமை அன்று தீமிதிப்பு நிகழ்வுடன் நிறைவிற்றது.

இதனை அடுத்து எட்டு நட்கள் கடந்த​ நிலையில் செய்யப்படும் எட்டாம் சடங்கு நிகழ்வானது 15.07.2017 சனிக்கிழமை அதாவது நேற்று தீப்பாய்ந்த​ பக்த​ அடியார்கள் தீக்குழிக்கு பால்வார்த்தல்​ அதனைத் தொடர்ந்து பக்தர்களின் பொங்கல் படையலுடன் அம்பாளுக்கான​ பூசைகள் இடம்பெற்றது. இதன்போது நூற்றுக்கணக்கான​ பக்த​ அடியார்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காரைதீவின் முதற்தர செய்தி இணையதளமான காரைதீவு.எல்கே இணையதளம் PS Studio உடன் இணைந்து தீமிதிப்பு நிகழ்வுகள் உள்ளடக்கிய இறுவெட்டுக்கள்
வெளியிடும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

இறுவெட்டுக்கான அனுசரணை வழங்கியிருந்தார்கள் மார்க்கண்டு ஜெகநாதன் குடும்பத்தினர்- காரைதீவு மற்றும் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் குடும்பத்தினர்,காரைதீவு.

 

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்