சண்முகா மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான திட்டம்

தேர்தல்கள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து பாடசாலைகள் தோறும் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதனடிப்படையில் காரைதீவு சண்முகா மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டு தெரிவுக்கான தேர்தல் நாளை பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தரம் 6 முதல் 13 வரையுள்ள மாணவர்களிலிருந்து தெரிவு செய்யப்படும் மாணவ பிரதிநிதிகளைக் கொண்டு மாணவர் பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட உள்ளது.

மேலும், இதில் தரம் 6 முதல் 09 வரை 30 மாணவர்களும், தரம் 10 முதல் 13 வரை 65 மாணவர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.