சமயாசார நடைமுறைகள் அறிவியலுடன் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்படுகின்றன…

(உ.சுபராஜ்)

நாம் அன்றாடம் மேற்கொள்கின்ற சமயாசார நடைமுறைகள் அறிவியலுடன் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்படுகின்றன இதனை நம் முன்னோர்கள் கற்காலத்திலேயே கூறிச்சென்றுள்ளனர்.நாம் அன்றாடம் ஆலயங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஆலயம் செல்வதற்கு முன்னர் செய்யும் செயல்களில் அது பரவி காணப்படுகின்றது.

கற்பூரம் எரித்தல்:-

பொதுவாக வழிபாடுகளின் போது கற்பூரம் எரிப்பது வழக்கம் பலரும் இதனை வழிபாட்டின் அங்கமாக கருதுகின்றனர் இதில் அறிவியல் அம்சமும் காணப்படுகின்றது. கற்பூரம் , சாம்பிராணி எரிக்கும் போது அதன் புகை சென்று சேருமிடமெல்லாம் பொசிடிவ் (Positive ) சக்தி பரவுகின்றது. மேலும் , சூழலில் உள்ள விஷ அணுக்களை அழிக்கவும் இந்த புகைக்கு சக்தி உண்டு இதனால்,இறையருளும் கிடைக்கப்பெறும்.இந்த உண்மைகளை அன்றே அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள்.

திலகம் இடல்-:

திலகமிடுவது ஆத்மீக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொதுக் கருத்து  குங்குமம்,சந்தணம், திருநீறு என்பவை பொதுவாக திலகமிட பயன்படுகிறது. மனித உடலின் ஐந்தாவது திறன் மையமான நெற்றியின் மத்தியிலே பொட்டு வைப்பது வழக்கம். இம் மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில் அடகியிருக்கும் மருத்துவ குணங்களை உறுஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது பிரம்ம முகூர்த்தத்தில் சந்தணமும் விடியற் காலையில் குங்குமமும் மாலைப் பொழுதில் திருநீறும் அணிவது நரம்புறுதிக்கும் நோய் நிவாரணத்திற்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்மந்தப்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிப்டுத்தியுள்ளன.
காலையில் சூரிய நமஸ்காரம் செய்தல்:-

தொன்று தொட்டே இந்து மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனம் உறுதியடையவும் அமைதியடையவும் உதவும். இதனை விதிமுறைகளின்படி செய்யும் போது உடற் பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றன. எமது உடலில் உள்ள எல்லா மூட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகின்றது. சருமத்தில் விற்றமீன் னு உற்பத்தி செய்யும் திறன் சூரிய ஒளிக்கதிர்களுக்கு உண்டு கல்சிய உற்பத்தியை கட்டுப்படுத்தும் திறனும் உண்டு. உடல் உறுப்புக்கள் உறுதி பெறுவதால் காச நோய் அணுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றது. இவற்றை அறிவியல் துறை அங்கிகரித்துள்ளது. 
ஆலயத்தினுள் அடி பிரதட்சணம் செய்தல்:-

கோயில் சுவர்களுக்குட்பட்ட இடம் தெய்வ பூமி என்பதே இந்துமத நம்பிக்கை இங்கு வழிபாட்டில் ஈடுபடும் போது அடிமேல் அடி வைத்து அடிப்பிதட்சணம் பண்ணி வழிபட வேண்டும் என்பது புராதன வழமை. இதனை அறிவியல் நோக்கிலும் நோக்கியுள்ளனர் முன்னோர்கள், பாதங்கள் இயல்பாகவே காந்த சக்தியுடைய தரையில் படும் போது மனித உடல் நலத்துக்கு உகந்தது என கண்டறியப்பட்டுள்ளது பூமியின் காந்த சக்தியின் ஒழுக்கு, பாதம் தரையில் பதியும் போது உடலுக்குள் செலுத்தப்படுகின்றது, அதுமட்டுமல்லாமல் ,மூலிகைகளுடைய மலர்களும், இலைகளும் கலந்த தண்ணீர் விழுந்த பூமியானதால் கோயில் சுற்றுமுள்ள மண்ணுக்கு மருத்துவ குணங்களும் உண்டு. 

சமயத்தின் பால் அதிக அக்கரை கொண்ட ஆதிகால மனிதன் பின்பற்றி வந்த நடவடிக்கைகள் மனித வாழ்வை செம்மைபடுத்துவனவாக அமைந்தன   இவ்வாறாக ஆலய வழிபாடுகளில் நாம் மேற்க்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கும் அறிவியலுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்வு காணப்படுகிறது.