சித்த ரதபவனியின் போது பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் மதிய நேர அன்னதானம்

சித்துக்கள் பல​ புரிந்து காரைதீவு பதியில் ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 66வது குருபூசை தின நிகழ்வினை முன்னிட்டு சரியை,கிரியை,யோகம்,ஞானம் எங்கும் மேல் ஒங்க​ இசை,நடனம்,பரதம்,கூத்து,கும்மி என்பன​ ஆரவாரிக்க​ அடியவர்கள் பஜனை பாடிட​ சித்தர் ரதபவனி ஊர்வலமானது ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஜீவ​ சமாதி ஆலயத்திலிருந்து ஆரம்ப​மாகி சூரிய, சந்திரன் வரவேற்க, காண்டா மணி ஒலிக்க, நந்திவாகனத்தில் அமர்ந்திருந்து நந்தி பெருமான் வழிகாட்ட சித்தர் ரதபவனியானது காலை காரைதீவில் ஆரம்பமாகி தற்போது அக்கரைப்பற்று நகர், ஆலையடிவேம்பு ஊடாக தற்போது பனங்காட்டு பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் மதிய நேர அன்னதானத்தின் பின்னர் சிறப்பாக பவனி வருகின்றது.

இவ் ரதபவனியில் காரைதீவு இந்து சமய விருத்தி சங்க உறுப்பினர்கள்,காரைதீவு அறநெறிப் பாடசாலை மாணவர்கள், காரைதீவில் உள்ள சமூக சமய பொது அமைப்புக்கள்,விளையாட்டுக் கழக​ உறுப்பினர்கள்,மற்றும் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஜீவ​ சமாதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த ரதபவனியானது காரைதீவு,அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு,கோளாவில் ஊடாக கண்ணகி கிரமத்தை சென்றடைந்து மீண்டும் காரைதீவை வந்தடையும்.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்