சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன வருட கால்கோள் விழா

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் உலகம் எங்கும் சிறப்பாக இன்று நடைபெற்றிருக்கின்ற வேளை அவர் பிறந்த இடமான காரைதீவில் இன்று (27)சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றத்தின் ஏற்பாட்டில் விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் விபுலானந்தரின் 125வது ஜனன வருட கால் கோள் விழா சிறப்பாக நடைபெற்றது.

முதலாம் கட்ட நிகழ்வுகளாக கொடியேற்றம்,சுவாமி பிறந்த இல்லத்தில் பூஜை,சுவாமி விபுலானந்தரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்தலும் புஸ்பாஞ்சலி நிகழ்வும்,விபுலானந்த வீதி பெயர்ப்பலகை திரைநீக்கம்,ஜனன வருட செயற்பாட்டிற்காக பட்டைய அழைப்பு,விபுலானந்தரின் 125வது ஜனன தின திரு உருவ பட அறிமுக நிகழ்வு என்பன சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வில் ஶ்ரீமத் சுவாமி சர்வருபானந்தாஜி (தலைவர் இராமகிருஷ்ண மிஷன் இலங்கை), ஶ்ரீமத் சுவாமி பிரபுபிரேமானந்தாஜி(பொறுப்பாளர் மட்டக்களப்பு இராம கிருஷ்ன மிஷன்) அம்பாரை மாவட்ட பா.உ கவீந்திரன் கோடிஸ்வரன் மாகாண சபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன்,கலையரசன்,துரைரெட்னம் ஆகியார் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இன் நிகழ்விற்கு பாடசாலை மாணவர்கள்,இந்துசமய விருத்தி சங்க உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்