சிறுவர் உரிமைகள்,பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம் தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடல்

சிறுவர் உரிமைகள் ,பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம் தொடர்பான மாவட்ட மட்ட மீளாய்வு கலந்துரையாடல் நிகழ்வானது  அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. K. விமலநாதன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 27 .04 .2017 இன்று  கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஜனாப்.லத்தீப் இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு காரைதீவு பிரதேச செயலாளர் உட்பட ஏனைய பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள்,பொலிஸ் பிரிவு, நன்னடத்தை பிரிவு ஏனைய சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.