சீனியின் விலை நேற்று முதல் குறைப்பு!

சீனியின் மொத்த விற்பனை விலை 3 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், 1 கிலோகிராம் சீனி 99 ரூபாயிலிருந்து 96 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.