சீமேந்து ஏற்றி வந்த லொறி குடைசாய்ந்து விபத்து!

திருகோணமலையில் இருந்து சீமேந்து ஏற்றி வந்த லொறி ஒன்று குடைசாய்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று மைலம்பாவெளியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவமானது நேற்றிரவு (09) மைலம்பாவெளியில் இடம்பெற்றுள்ளது.

இதில் சீமேந்து ஏற்றி வந்த லொறி மிகுந்த சேதமடைந்ததுடன் சாரதி சிறிய காயங்களுடனும் உயிர்தப்பியுள்ளார்.

அத்துடன் அருகில் இருந்த கடையொன்றுக்கும் சிறிய தேசங்கள் ஏற்பட்டுள்ளது.