செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமத்திற்கான 52நாள் பாதயாத்திரை ஆரம்பமாகியது

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழா உற்சவத்தையொட்டிய இலங்கையின் மிகநீண்ட கதிர்காமப் பாதயாத்திரை இன்று காலை யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து வேல்சாமி தலைமையில் ஆரம்பமாகியது.

வடக்கு – கிழக்கு – ஊவா ஆகிய 03 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்களை இணைக்கும் 52 நாட்கள் 572 கி.மீற்றர் தூரம் கொண்ட இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையானது இன்று 03ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகனாலயத்திலிருந்து விசேட பூஜை புனஸ்காரங்களுடன் ஆரம்பமாகியது.

இதன் போதான படங்கள்…