சேனைக்குடியிருப்பில் 15 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை!

கல்முனை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட கலைமகள் வீதி சேனைக்குடியிருப்பு 01 முகவரியில் வசிக்கும் யோகராஜா லக்சனா என்பவர் நேற்றுமுன்தினம் (06) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அழகு கலை நிலையத்தில் தனது தலைமுடியை வெட்டிவிட்டு வீடு வந்ததன் பின்னர் வெட்டப்பட்ட தலைமுடி அழகின்மையினால் மனம் தளர்வுற்றதன் காரணத்தினால் அறைக்குள் சென்ற எனது மகள் 10 மணியாகியும் திறக்கவில்லை பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது எனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிர் இழந்ததாக வைத்தியர் கூறினார். என உயிரிழந்த லக்சனாவின் தந்தையார் கணபதிப்பிள்ளை யோகராஜா கல்முனை பொலிஸில் முறைப்பாடு வாக்குமூல பதிவில் கூறினார்.

அதன் மேலதிக விசாரணைகள் கல்முனை பொலிஸ் நிலையத்தினால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.