ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அக்கரைப்பற்றிற்கு விஜயம்.

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அக்கரைப்பற்று வைத்தியசாலையில் இடம்பெரும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்ற பின் முதற் தடவையாக அக்கறைப்பற்றுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிட தொகுதிகளின் திறப்பு விழாவிற்கு வந்த ஜனாதிபதி அவர்கள் அங்கு திறப்பு விழாவை முடித்துக்கொண்டு அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆகிய நகரங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டார்.