ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் பின்தங்கிய கிராம மாணவர்களுக்கான உதவிகள்…

மட்டு.மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பலவழிகளாலும் புறக்கணிக்கப்பட்ட கிராமங்களைச்சேர்ந்த இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் தரம் 5 மாணவர்களுக்கான உதவிகள் மனிதாபிமான அமைப்பொன்றினால் வழங்கப்பட்டுள்ளன.

ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் தாயகம் நோக்கிய கல்வி செயற்திட்டத்தின் கீழ் நேற்று பன்குடாவெளி கித்துள் மரப்பாலம் உறுகாமம் காயங்குடா புல்லுமலை இலுப்பட்டிச்சேனை கரடியனாறு கொடுவாமடு எனும் 9 பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி அந்த புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தங்கியிருந்து கல்வி கற்கும் 32 மாணவர்களுக்கு ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் உலர் உணவுப்பொருட்கள் பாடசாலை அதிபர் சகீலாவிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் கி.மா பணிப்பாளர் கி.ஜெயசிறில் ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் மட்டக்களப்பு தலைவர் சிவானந்தராசா ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் காரைதீவு பிரதேச தலைவர் ஜெயராஜி என பலரும் கலந்து கொண்டனர்.