ஜொலிகின்ஸ் மற்றும் லம்கோ அணிகளுக்கிடையே நடைபெற்ற சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி

காரைதீவு ஜொலிகின்ஸ் மற்றும் சாய்ந்தமருது லம்கோ அணிகளுக்கிடையே நடைபெற்ற சினேகபூர்வ கடின பந்து கிரிக்கெட் போட்டியானது இன்று(05) காரைதீவு கனகரெட்னம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லம்கோ அணியினர் 187/2 ஓட்டங்களை பெற்று வலுவான இலக்கை அடைந்தனர். துடுப்பாட்டத்தில் இமாம் 66* ,றிபான் 53 ஓட்டங்களை பெற்றுகொடுத்தனர்.

188 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜொலிகிங்ஸ் அணியினர் 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 80 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.