டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

டெங்கு என்றால் என்ன?

  • ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
  • இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது.
  • உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
  • ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர்
  • ஆப்ரிக்கா அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது.

அறிகுறிகள்

 

  • தலைவலி
  • காய்ச்சல்
  • தோலில் தடிப்புகள்
  • உடம்பு வலிகள்
  • இந்த அறிகுறிகள் 2-3 நாட்களுக்கு நீடிக்கலாம்
  • இந்த நோய் தாக்கிய ஒருவருக்கு சுமார் மூன்று மாதங்கள் களைப்பாக உணர்வர். ஆனால் பொதுவாக இதற்கு சிகிச்சை தேவைப்படாது.

 

டெங்கு நோய் பீடித்தால் மரணம் உறுதியா?

  • குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களையும் பாதிக்கும் இந்நோய், பொதுவாக மரணத்தை ஏற்படுத்துவதில்லை.
  • ஆனால் டி.எச்.எஃப் என்ற ஒரு வகை ஜுரம் உயிராபத்தை தோற்றுவிப்பதாக இருக்கலாம்.