தமிழன் என்றால் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது!!

நாளை தைப்பொங்கல் தமிழர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக முன்கூட்டியே ஓர் “ தித்திக்கட்டும் தைப்பொங்கல்.., பொங்கலோ பொங்கல்” இனிய நல்வாழ்த்துக்கள்.

என்றாலும் அன்று பொங்கிய பொங்கல் இன்று இல்லை. இப்போது ஏதோ கொண்டாட வேண்டும் அல்லது விடுமுறை வேண்டும் என்பதற்காகவே பெயருக்கு பொங்கி விட்டு செல்லும் நாகரீக கலாச்சாரம் வெகுவாக வளர்ந்து விட்டது.

இந்த பொங்கல் உணர்த்துவது உதவியை அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்பதையே. ஆனால் நம்மில் எத்தனைப்பேர் பொங்கிய பொங்கலை ஏழை ஒருத்தருக்கு படைக்கின்றோம் அது தான் பெருமையா?

உண்ணாத கடவுளுக்கு படைப்பதை விடவும் பசியால் வாடும் ஓர் உயிருக்காவது படைக்கவேண்டும். கடவுளும் கலாச்சாரமும் சொல்லுவதும் அதனையே.

இவை இருக்கட்டும், தைப்பொங்கல், சித்திரை வருடப் பிறப்பு இவை இரண்டில் எது தமிழரின் புதுவருடப்பிறப்பு என்பது தற்போதைய தமிழர் மத்தியில் ஓர் கேள்வியாகவும் காணப்பட்டு வருகின்றது.

எமது பண்டைய தமிழர்கள் பல்வேறுபட்ட கணிப்புக்களின் விளைவாக 5 நாட்காட்டிகளை பயன்படுத்தி கொண்டு வந்துள்ளார்கள். இதனால் ஆதித்தமிழர்களிடையே தைப் பொங்கல், சித்திரை பிறப்பு, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு போன்ற 5 புதுவருடத் தொடக்கங்கள் காணப்பட்டிருக்கின்றன.

இந்த 5 நாட்காட்டிகளும் சூரிய ஆண்டு நாட்காட்டி, சந்திர ஆண்டு நாட்காட்டி என்ற அடிப்படையில் அமைந்தன. இந்த நாட்காட்டிகளில் இப்போது நடைமுறையில் உள்ள ஆண்டுமுறை (365 1/4 நாட்கள்) கொண்ட நாட்காட்டிகளுடன் ஒத்துப்போவது சூரிய சந்திர நாட்காட்டிகளே.

இவற்றின் பாதிப்பே இப்போது தமிழர்களிடம் இரண்டு புத்தாண்டுகள் என்ற குழப்பம் இருப்பதற்கான காரணம். மேலும் சூரிய நாட்காட்டியானது சூரியனின் சுழற்சியையும் புவியின் சுழற்சி சுற்றுகையையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

சந்திர நாட்காட்டியானது நிலவின் பின்னால் உள்ள நட்சத்திரத்தை கவனிப்பதன் மூலம் கணிக்கப்பட்டது.

இங்கு சூரிய, சந்திர நாட்காட்டிகளின் குழப்பத்திற்கு தமிழர் கலாச்சாரம் அழிந்ததாக கூறப்படும் குமரிக்கண்டமே காரணம் என்றும் கூறப்படுகின்றது.

இவற்றின் அடிப்படையில், சூரியன் தான் மனித வாழ்விற்கு முக்கியமானது என்பதனால் தை மாதம் இளவேனில் காலத்தில் அது வருவதாலும் தை மாதம் பிறப்பு புதுவருடப்பிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தை புதுவருடப்பிறப்பை நாம் மட்டும் அதாவது தமிழர் மட்டும் கொண்டாடவில்லை உலகம் முழுதும் இதனை கொண்டாடி உள்ளார்கள் என்று நிறுவப்பட்டுள்ளது.

16ஆம் நூற்றாண்டுவரை தை முதலாம் திகதி (ஜனவரி 14) அன்றே புதுவருடப்பிறப்பாக உலகம் கொண்டாடியுள்ளது. எகிப்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவான யூலியன் நாட்காட்டி முறையை பின்பற்றி வந்த காலமே 16ஆம் நூற்றாண்டு.

இந்த யூலியன் நாட்காட்டியின் அடிப்படை தமிழரின் சூரிய நாட்காட்டியே என்பது தமிழர் பெருமிதம் கொள்ள வேண்டிய விடயம்.

இப்படியான தைப் பொங்கல் வருடப்பிறப்பு எப்படி மாறிப்போனது என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது. தமிழர் முக்கியத்துவம் கொடுத்து வந்த சூரிய நாட்காட்டி மாறிப்போனதாலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது ஆரியர்களின் படையெடுப்பின் போது சூரிய நாட்காட்டியை தவிர்த்து சந்திர நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்ட சித்திரை வருடப்பிறப்பை புதுவருடமாக கொண்டாட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய ஆரிய மன்னன் சாலிக்வாகனன் என்பவனே இந்த கட்டளையை பிறப்பித்துள்ளான். அந்த ஆட்சி ஆக்ரமிப்பின் பின்னரே தமிழர் கலாச்சாரமே மாற்றம் பெற்றது அதிலிருந்து இன்று வரை அது மாற்றம் பெற வில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விடயம்.

இப்போது ஓர் புதுக் கேள்வி அதாவது பொங்கல் தினத்தன்று ஜனவரி 14 அன்றே தமிழர்களின் புது வருடப்பிறப்பு என்றால் ஜனவரி முதலாம் திகதி (01) புது வருடமாக கொண்டாடலாமே என்ற ஓர் கருத்தும் இருக்கின்றது இதுவும் ஓர் கேள்வி தான்.

16ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சபை சார்பாக 13ஆவது போப் கிரகெரி அப்போதைய நாட்காட்டியை மாற்றி அமைத்தார்.

அதன் அடிப்படையில் தமிழரின் நாட்காட்டியில் இருந்து 14 நாட்கள் பிற்பட்ட வகையில் அமைந்த நாட்களில் மாற்றம் பெற்ற கிரகெரியன் நாட்காட்டி என்பதை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவ்வாறாக நாட்காட்டிகளில் பல மாற்றங்கள் ஏற்பட தமிழரின் புது வருடமும் மாறிப்போனது. அதன் படி மத சார்பு அற்ற வகையில் தமிழரின் நாட்காட்டி ஒட்டு மொத்த உலகத்தின் நாட்காட்டியாக இருப்பதை விரும்பாத காரணமாக இருக்கலாம்.

உலக அடிப்படையாக இருந்த நாட்காட்டிகளில் ஏற்பட்ட மாற்றம் பெற்று போனது தமிழரின் சிறப்பும் மாறிப்போய் மறக்க வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக தைப் பொங்கல் தமிழரின் புதுவருடமாக வரலாறு சொன்னாலும் கூட மாற்று வகையில் கருத்தும் இருக்கத் தான் செய்கின்றது.

புதுவருடம் எதுவாக இருக்கட்டும், பொங்கலும் மாறிப்போகட்டும் தமிழரின் தேவை கலாச்சாரத்தைப் பாதுகாப்பது மட்டுமே.

அப்போது பொங்கல் தமிழர் சிறப்பினை, தமிழரின் வீரத்தினை எடுத்துக் காட்டும் திருநாளாக இருந்தது.

ஆனால் இப்போது ஆங்கிலத்தில் வாழ்த்துச் சொல்லும் நிலை உருவாகிவிட்டது. ஒட்டுமொத்த ஊரும் கூடி பொங்கிய பொங்கல் இன்று வாயு அடுப்பில் வெந்து கொண்டிருக்கின்றது.

இப்படி வெந்து ஆவியாவது பால் மட்டும் அல்ல தமிழரின் பாரம்பரியமும் என்பதை தமிழர் ஒவ்வொருவரும் மறந்திடல் ஆகாது.

நாளைய தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுக்க, அவர்கள் சிறப்பாக வளர விட்டு வைப்போம் எம் பெருமையை சிறப்பை.

நாளை பொங்கலா என்பதோடு நானும் தமிழனா? என்ற கேள்வியையும் கேட்டுக்கொண்டு நாளை தலைமுறைக்கு எடுத்துக்காட்டாய் மாற சிறப்பாக பொங்குவோம் தித்திக்கும் பொங்கலை…, “ பொங்கலோ பொங்கல்”