தலை சிதறி ஒருவர் பலி :கோயில்போரதீவில் கோர விபத்து

மட்டக்களப்பு, படுவான்கரை பிரதேசமான கோயில்போரதீவு பிரதான வீதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தலை சிதறி ஒருவர் பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

பெரியபோரதீவு பட்டாபுரத்தை சேர்ந்த கொல்லன் தொழில் செய்யும் பிள்ளையான் தம்பி-கிருஸ்ணபிள்ளை என்பவர் சம்பவ இடத்தில் தலை சிதறி பலியாகியுள்ளார்

அவருடன் சென்ற மட்பாண்ட தொழில் செய்கின்ற புண்ணியமூர்த்தி என்பவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.