தாந்தாமலை அருள்மிகு ஶ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம்…

மட்டக்களப்பில் சின்னக்கதிர்காமம் என்றும் தாண்டவகிரி என்றும் வரலாற்றுச்சிறப்புமிக்கதாக விளங்கும் தாந்தாமலை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு இவ்வாண்டு வருடாந்த மஹோற்சவமானதுஇன்று 16ம் திகதி கிரியைகள் இடம்பெற்று நாளை காலை (17) ம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் ஆவணி மாதம் 07ம் திகதி காலை 6 மணிக்கு திருவோண நட்சத்திரம் கூடிய சுப வேளையில் எம் பெருமானின் புண்ணிய தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.

இக்காலங்களில் அனைத்து அடியார்களுக்கு ஏற்ற வகையில் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை மஹோற்சவ காலங்களில் கதாப்பிரசங்கங்கள், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.