தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு கோட்டைக்கல்லாற்றிலிருந்து புனித பாதயாத்திரை

கிழக்கில் பிரசித்திபெற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான கோட்டைக்கல்லாறு புனித தல யாத்திரை ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அம்பாரை வில் பிள்ளையார் ஆலய விசேட பூஜையைத் தொடர்ந்து கடந்த சனியன்று அதிகாலை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா புனித யாத்திரையை ஆரம்பித்து வைப்பதையும், பாதயாத்திரை புற்றடி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம், ஓந்தாச்சிமடம் ஸ்ரீ பிள்ளையார் ஆலயம், பட்டிருப்பு தோட்ட நாகதம்பிரான் ஆலயம் ஆகியவற்றை தரிசித்து அங்கு காத்திருந்த பக்தர்களையும் இணைத்துக்கொண்டு பாதயாத்திரை தொடர்ந்து சென்றது.

இவ்வாண்டு சென்ற ஆண்டைவிட அதிகமானோர் இணைந்து கொண்டதையும்,ஓந்தாச்சிமடத்திலிருந்தும் பட்டிருப்பிலிருந்தும் மேலும் பல பக்தாகள் இணைந்து கொண்டனர். அரோஹரா ஹோசம் மற்றும், தாந்தாமலை முருகன் புகழ் பாடியபடியே பக்திமயமாக பாதயாத்திரை நடைபெற்றது.