திருக்குளிர்த்தி சிறப்பு கவிதை…

திருக்குளிர்த்தி

1. கண்ணகி தாய்க்கு திருவிழா – எம்
கரையுருக்கே அது பெருவிழா
எட்டு தினங்கள் உனை போற்றி வணங்கிடும் நல்விழா

2. வைகாசி திங்கள் நன்னாளிலே
கல்யாணக்கால் வெட்டலுடனே
திருகதவம் திறக்கும் பொன்னாளிலே
ஆரம்பமாகும் உன் திருக்குளிர்ச்சி விழா

3. தொடர்ந்திடும் உன் நித்திய பூஜைகளும்
அழகான அலங்காரங்களும்
மின்னொளியில் மின்னிடும் வாசல்களும்
விண்ணை தொடும் அரோகரா கோசங்களும்

4. பெண்ணவளோ தீச்சட்டிதனை ஏந்திட
களையரோ அங்கமதை பிர தட்ச்சனையாக்கிட
அலையென திரண்டிரும் பக்தர்களுடனே
விலகாத உறவென நிற்பாய் அம்மா

5. இறுதி நாள் அதிலே துக்கம் – தனை
களைந்து பாடிடும் குளிர்ச்சியுடனே
இனிதே நிறைவுதனை எட்டிடுமே
உந்தன் திருகுளிர்ச்சி உற்சவம்

6. பார் போற்றும் பத்தினி தெய்வமே
எங்களை காத்திடும் காவல் தெய்வமே
வேண்டியவர்களுக்கு அருள்தனை அளித்திடுவாய்
எம் வினைகளைந்து குறைதனை தீர்ப்பாய் தாயே

கவிதை – பிரிந்தன்