திருக்கோவில் குடிநிலத்தில் நடைபெற்ற சித்திரை விளையாட்டுப் போட்டி!

குடிநிலம் ஏழு கிளையின் ஏற்பாட்டில்இளைஞர் மேம்பாட்டு ஒன்றியமும் எவரெஸ்ட் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய மாபெரும் சித்திரைப் புத்தாண்டு  விளையாட்டுப் போட்டி(18.04.2017) அன்று நடைபெற்றது.
திருக்கோயில் இளைஞர் மேம்பாட்டு ஒன்றிய தலைவர் லு.டினேஸ்காந் தலைமையில் குடிநில விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.இராஜேஸ்வரன்  பிரதம அதிதியாகவும், திருக்கோயில் பிரதேச சபை செயலாளர் யு.சுந்தரகுமார், ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கி.ஜெயசிறில், விஷேட அதிதிகளாகவும், திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கன.இராஜரெட்ணம், குடிநில கிராம நிலதாரி எஸ்.பார்த்தீபன், சிறப்பு அதிதிகளாகவும், சமூக தரிசன ஒன்றிய ஸ்தாபகர் பி.நந்தபாலு கௌரவ அதிதியாகவும் மற்றும் கிராம பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில்  அதிதிகளால் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.