திருப்பாவை தைநீராடல் – தேற்றாத்தீவில்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் கடந்த முப்பது நாட்களாக நடைபெற்று வந்த திருப்பாவை தினத்தின் இறுதி நாளாகிய  (14.01.2016) சனிக்கிழமை அன்று அதிகாலை 05.30 மணியளவில் இந்து சமூத்திரத்தில் தைநீராடலுடன் தீர்த உச்சவம் பெற்றது.திருப்பாவை விரத நாட்களில் தேற்றாத்தீவுஇந்து இளைஞர் மன்றத்தினரால் கிராமம் முழுவதும் அதிகாலை வேளையில் பஜனையும்அதனை தொடர்ந்து காலை 05.00 மணியளவில் விரத்துக்கான விசேட பூஜையும் இடம்பெற்று வந்தன. அதிகலை 4.00 மணியில் இருந்து சுவாமி நகர் வலம் வருகை இடம் பெற்றதை தொடர்ந்து இந்து சமூத்திரத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெற்றமைகுறிப்பிடதக்கவிடயம்.