நஞ்சற்ற உணவுகளை உண்போம் எனும் தொனிப்பொருளில் விபுலானந்தாவின் பேரணி

இயற்கை வேளான்மை செய்வோம்,நஞ்சு தன்மையற்ற உணவுகளுக்கு பழக்கப்படுவோம் எனும் தொனிப்பொருளில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியினால் பாடசாலை அதிபர் திரு.வித்தியராஜன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற பேரணியானது இன்று (09)இடம் பெற்றது.

இயற்கை விவசாயம் செய்வோம்,நஞ்சற்ற உணவுகளை உண்போம் என பதாதைகள் ஏந்திய வகையில் மாணவர்கள் காரைதீவு பிரதேசத்தின் சில வீதிகளினூடாக பேரணியாக சென்றனர்.