நடப்பு சாம்பியனை நடுநடுங்க வைத்து அபார வெற்றி பெற்று அசத்தியது இலங்கை..!

 நடப்பு சாம்பியனை நடுநடுங்க வைத்து அபார வெற்றி பெற்று அசத்தியது இலங்கை..!

சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பியன் கிண்ணப் போட்டியின் இன்றைய போட்டியில், இந்திய அணியை எதிர்த்து இலங்கை அணி பலப்பரீட்சை நடத்துகின்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் இந்திய அணி 6 இலக்குக்கள் நஷ்டத்திற்கு 321 ஓட்டங்களைக் குவித்தது. இந்திய அணி சார்பாக ஷிகர் தவான் 125 ஓட்டங்களையும், ரோகித் ஷர்மா 78 ஓட்டங்களையும் டோனி 63 ஓட்டங்களையும் குவித்தனர்.

இலங்கை சார்பில் பந்துவீச்சில் மலிங்க இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

 

இலங்கை அணி 322 என்ற சாதனை இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 3 இலக்கு நஷ்டத்திற்கு 322 ஓட்டங்களைப் பெற்று 7 இலக்குக்களால் இலகுவாக வெற்றி பெற்றது.

 

நிரோஷன் டிக்வெல்ல 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இரண்டாவது இலக்கில் 159 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் 76 ஓட்டங்களைப் பெற்ற குணதிலக்க ஆட்டமிழந்தார். தொடர்ந்து 89 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மென்டிஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து குஷால் பெரேரா 47 ஓட்டங்களுடன் காயம் காரணமாக வெளியேறினார். இறுதியில் அஞ்சலோ மத்தியூஸ் 52 ஓட்டங்களுடனும் அசேல குணரட்ன 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் வெற்றியிலக்கை அடைய உதவினர். பந்து வீச்சில் இந்தியா சார்பாக புவனேஸ்வரகுமார் ஒரு இலக்கை கைப்பற்றினார்.

இவ் இலக்கு சம்பியன்ஸ் கிண்ண வரலாற்றில் துரத்தியடிக்கப்ட்ட அதிகூடிய இலக்காகும். மேலும் ஓவல் மைதானத்தில் துரத்தியடிக்கப்பட்ட அதிகூடிய இலக்காகவும் பதிவுசெய்யப்படுகின்றது. இலங்கை வரலாற்றில் துரத்தியடிக்கப்பட்ட இரண்டாவது இலக்காகும்.