நட்புடன் …

உணர்வும் உயிரும் ஒன்றாக
துன்பம் பகிரும்

இரண்டாக
தாழ்வும் உயர்வு என்றாக
உதவும் நட்பு நன்றாக

காசுபணம் சேர்க்காது தனக்காக
உடலோடு உயிரைத் தரும் உ

னக்காக…
கேட்காமலே எடுக்கும்
எடுக்காமலே கொடுக்கும்
கொடுத்ததை உடனே மறக்கும்…

வதைத்தாலும் வார்த்தைகளை மறக்கும்
புதைத்தாலும் பூக்களாய் பூக்கும்
பிரித்தாலும் உ(ன்)னை மட்டும் நினைக்கும்
எரித்தாலும் விளக்காய் ஒளிரும்…

நீ புன்னகை காட்டு
உனக்காய் வியர்வை கொட்டும்

நீ வியர்வை சிந்து
உனக்காய் குருதி கொடுக்கும்
நீ குருதி வடித்தால் போதும்
உனக்காய் உடனே
உயிரை விடுக்கும்