நாடு முழுவுதும் பரவும் வைரஸ் நோய் இன்புளுவென்சா A.H.1 N.1

நாடு முழுவுதும் பரவும் வைரஸ் நோய் இன்புளுவென்சா A.H. 1 N. 1 என இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஷேட மருத்துவர் சமித கினிகே தெரிவித்துள்ளார். குளிர், காய்ச்சல் மற்றும் இருமல் இந்த நோயிற்கான அடிப்படை அறிகுறிகள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள், சிறிய குழந்தைகள் மற்றும் நோய் தடுப்பு சக்தி குறைவான நபர்களும் இந்த நோய் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். இவ்வாறான அறிகுறிகள் ஏற்படுமானால் உடனடியாக மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என தொற்று நோய் விஷேட மருத்துவர் சமித கினிகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னதாக, அவர்களின் விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் இதனைத் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஒருவிதமான மர்மக் காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களின் கல்வி செயற்பாடுகளும் மறுஅறிவித்தல் இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனவே மாணவர்கள் தங்களின் பல்கலைக்கழக விடுதிகளில் இருந்து இன்று நண்பகலுக்கு முன்னதாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.