நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை ,களுத்துறை, ரட்ணபுர மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும். இதன்போது ஓரளவு கடுங்காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய இடங்களில் காலநிலை சாதாரணமாக காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.