நிந்தவூரில் இன்று காலை இடம்பெற்ற பாரிய விபத்து

நிந்தவூர் பிரதான வீதி சம்பத் வங்கிக்கு முன்னால் இன்று காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் நேருக்குநேர் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பாரிய விபத்துக்குள்ளாகி மையக்க நிலையில் கிடந்தபோது நபரை அவ்விடத்தில் நின்றவர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகாத்த வைத்தியசாலைக்கு அவசமாக எடுத்துச் சென்றனர்.

மேலும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில் கல்முனை அக்கரைபற்ரை நோக்கி வந்துகொண்டிருந்த கண்டியயைச் சேர்ந்த லொறியிலேயே மோதுண்டுட மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மயக்கமுற்று கிடந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக கூறினர்.

சம்பவத்துக்குள்ளான நபர் நிந்தவூரைச் சேர்ந்த முன்னால் பிரதேச சபை உப தவிசாளர் “உமர் கத்தா” என இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.