நியுசிலாந்தில் 5.1 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம்

நியுசிலாந்து வடகிழக்கு தீவு பகுதியில் 5.1 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.நியுசிலாந்தின் தெற்கு தீவு பகுதியான கைகோர் தீவின் வடகிழக்கு பகுதியிலேயே குறித்த நடுக்கம் இடம்பெற்றுள்ளது.

தென் பசுபிக் பிராந்தியத்திலுள்ள பல்வேறு தீவு கூட்டங்களில் அதிகளவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுவருகின்றன. இருப்பினும் குறித்த நிலநடுக்கத்தினால் இதுவரை எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

மேலும் கடந்த வருடம் நவம்பர் மாதம் அந்நாட்டில் ஏற்பட்ட 7.8 ரிக்ட்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்ததுடன், அதிகளவான பொருட் சேதத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.