நீங்கியது தடை ; நாளை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு

 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டுமென கோரி மாணவர்கள் மற்றும் உலகலாவிய ரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இந்தியாவின் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் ஒருங்கிணைந்து அவசரச் சட்டம் கொண்டு வருவதை உறுதி செய்துள்ளன.

இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாளை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அவசரச் சட்ட கோப்பு தமிழ்நாட்டுக்கு நேற்று வந்து சேர்ந்தத நிலையில், அந்த கோப்பில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மாலையில் கையொப்பமிட்டு முறைப்படி அவசர சட்டத்தை பிறப்பித்தார்