நேற்று களுதாவளை மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட இரத்ததானம் முகாம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகவும் தேசிய மட்டத்தில் பேசப்படுகின்ற பாடசாலையாகவும் மட்ஃபடஃகளுதாவளை மகா வித்தியாலயம் விளங்குகின்றது.
இப் பாடசாலை 01.05.1951 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் தினத்தை நினைவுகூறும் முகமாக களுதாவளை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் இரத்ததானம் முகாம் ஒன்று நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயத்தின் அதிபர் பே.காப்தீபன் உட்பட அனேகமான பழைய மாணவர்கள் கலந்து இரத்ததானம் செய்தனர்.