நேற்று நாவிதன்வெளிக்கோட்ட தமிழ்மொழித்தினப்போட்டிகள் !

அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியையொட்டிய சம்மாந்துறை வலயத்தின் தமிழ்மொழித்தினப்போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

கல்விஅமைச்சின் ஏற்பாட்டில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீமின் நேரடி அறிவுறுத்தலின்பேரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

சம்மாந்துறைக்கோட்டத்திற்கான தமிழ்மொழித்தினப்போட்டிகள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சபூர்த்தம்பி தலைமையில் சம்மாந்துறை தாருஸலாம் மகாவித்தியாலயத்தில் கடந்தவாரம் நடைபெற்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளிக்கோட்டத்திற்கான தமிழ்மொழித்தினப்போட்டிகள் நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து தலைமையில் நடைபெற்றன. இறக்காமம் கோட்டமட்ட போட்டிகள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் யூ.எல்.மகுமூட்லெவ்வை தலைமையில் நடைபெற்றன.

சம்மாந்துறை வலயமட்டப்போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் 8ஆம் திகதிகளில் நடைபெறும் என பணிப்பாளர் நஜீம் தெரிவித்தார்.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிரார்த்த தினமான யூலை 19ஆம் திகதி தேசிய தமிழ்மொழித்தினவிழாவை கல்வியமைச்சு நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது.