பாலையடி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற திருவள்ளுவர் குருபூஜை நிகழ்வு

காரைதீவு பாலையடி பால விக்னேஸ்வரர் ஆலயத்தில் கணேஷா அறநெறி பாடசாலையின் திருவள்ளுவர் குருபூஜை நிகழ்வு இன்று (02)சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல கலைநிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் அணுசரணையுடன் கற்றல் உபகரணங்களும் புத்தகப்பைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் அவர்களும் சிறப்பு அதிதியாக பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும், ஆலய தர்மத்தாக்களும், சமூக சேவையாளர்களும் ,பெற்றோர்களும், மாணவர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.