பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும் இயற்கையின் எச்சரிக்கை!! காப்பது எப்படி….

பிரான்சின் வானிலை மையமான Météo France நேற்று புதன்கிழமை ஓர் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த வார இறுதியில் பிரான்ஸ் மிகவும் கடுமையான குளிர்க் காலநிலையைச் சந்திகக் உள்ளதாக இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்கண்டிநேவியாப் பகுதியில் இருந்து இறங்கும் இந்தக் கடும் குளிர்காற்றானது, இன்று வியாழக்கிழமையிலிருந்து கடுமையான குளிரைப் பிரான்சில் ஏற்படுத்த உள்ளது.

முக்கியமாகப் பிரான்சின் கிழக்குப் பெரும் பகுதி, இந்தக் குளிரினால் பெரிதும் பாதிப்படைய உள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்தப் பகுதிகள் -15°C வரையான கடும் குளிரைச் சந்திக்க உள்ளன. இவை போக்குவரத்துக்களைக் கடுமையாகப் பாதிக்க உள்ளன.

இந்தக் கடுமையான குளிர் பரிசையும் பெருமளவில் பாதிக்க உள்ளது.

மற்றைய பகுதிகளில் -6 °C வரையான குளிர் நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

1945,1963, மற்றும் 1985 ஆகிய வருடங்களில் பிரான்ஸ் -30°C வரையிலான குளிரைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.