புதிய வர்ணத்தில் அறிமுகமாகின்றது iPhone 7 மற்றும் iPhone 7 Plus..

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.

எனினும் தனது கைப்பேசிகளுக்கான சில சிறப்பம்சங்களை ஆப்பிள் நிறுவனம் நீண்ட காலத்திற்கு மாற்றாமல் வைத்திருக்கும்.

அதில் வர்ணங்களும் உள்ளடங்கும். இதற்கு காரணம் குறித்த கைப்பேசிகளுக்கான வரவேற்பினை மீண்டும் தூண்டுவதாகும்.

இதுவரை காலமும் Jet Black, Black, Silver, Gold, Rose Gold ஆகிய வர்ணங்களிலேயே அறிமுகமாகி வந்தது.

இந்நிலையில் தற்போது கண்கவர் சிவப்பு நிறத்திலான iPhone 7 மற்றும் iPhone 7 Plus கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இவை ஐக்கிய இராச்சியத்தின் பிரபல தொலைபேசி வலையமைப்பு நிறுவனமான Vodafone ஊடாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் 24ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசிகள் 128GB சேமிப்பு நினைவகம், 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.