புற்றுநோயை குணமாக்குகிறது தேன்” – விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

தேனை பயன்படுத்தி புற்றுநோய் புண்களை குணமாக்க முடியுமென்று மேற்கு வங்க மாநில ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கரக்பூர் ஐ.ஐ.டி.,யின் ரசாயன விஞ்ஞானிகள், பயோ தொழில் நுட்பவியலாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழு இந்த ஆராய்ச்சியை செய்துள்ளது.

 

‘வாய் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் புண்களில் இந்த பட்டையை ஒட்டும்போது புண்கள் வேகமாக குணமாவதுடன் மீண்டும் அந்த நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் இந்த குழுவின் ஆராய்ச்சியாளரான நந்தினி பந்தரு.புற்றுநோயை குணமாக்கும் அளவுக்கு தேனில் விஷயம் இருக்கிறதா என்று ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்…

 

‘‘சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ், கார்போஹைட்ரேட் மற்றும் பல்வேறு நொதிகள் தேனில் உள்ளது. இந்த நொதிகளும், மற்ற சத்துக்களும் வாய்புற்றுநோய் புண்களை மட்டுமல்ல உடலில் எங்கு புண் ஏற்பட்டாலும் குணப்படுத்தும் ஆற்றலுடையது. தசைகள், எலும்புகள், கொழுப்பு மற்றும் உடல் கட்டமைப்புக்கு அவசியமானது கபம்.

 

இந்த கபம் சார்ந்த பிரச்னைகள் அதிகரிப்பதே புற்றுநோய்க்கு காரணமாக அமைகிறது. உடலில் ஏற்படும் கபம் சார்ந்த நோய்களை குணமாக்குவதற்கு உலகிலேயே மிகச்சிறந்த நிவாரணி தேன்தான். அது புண்களுக்கு கொடுக்கப்படும் உள்மருந்தாகவும், புறமருந்தாகவும் பயன்படுகிறது.

 

புண்களிலுள்ள கிருமிகளை நீக்கி, சுத்தமாக வைக்க தேன் உதவுகிறது. உடலிலுள்ள பிளந்த புண்களின் பகுதிகளை ஒன்றுசேர்த்து ஆற்றக்கூடிய வல்லமையும் கொண்டது தேன். மற்ற ஆயுர்வேத மருந்துகளோடு சேர்த்து பயன்படுத்தும்போது அந்த மருந்தினுடைய செயல்திறன் இன்னும் அதிகமாகிவிடும்’’ என்று தேன் மகத்துவம் பேசுகிறார் பாலமுருகன்