பெரியநீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

பெரியநீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் 31 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களைக் கொண்டு பெரியநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் 2017 ஆம் வருடத்திற்கான மென்பந்து சுற்றுப் போட்டியானது காவேரி விளையாட்டு கழகத்தினால் கடந்த 2017.04.13 ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் பிரதம அதிதியாகவும் மற்றும் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதில் முதலாவது இடத்தை ஒலுவில் லோயல் விளையாட்டுக் கழகமும் ,இரண்டாம் மூன்றாம் இடங்களை அட்டாளைசேனை சோபா், உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் தட்டிச்சென்றது.
மேலும் இந்நிகழ்வில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேடயங்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.