பேக்கரி வண்டியில் மிதிபட்டு உயிர் பிரிந்த ஒன்றரை வயதுக் குழந்தை !

நிந்தவூ 6ம்,பிரிவைச் சேர்ந்த கிண்ணியாகாரரின் பேரன் ஒன்னரை வயதுக் குழந்தை  நேற்று மாலை பேக்கரி வண்டியில் மிதிபட்டு நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற வேளையில் இடையில் உயிர் பிரிந்துள்ளது.

குழந்தையின் தாய் பேக்கரி வண்டியில் சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்த போது குழந்தை வண்டிக்கு முன் நின்றுண்டிருந்ததை கவனங்கொள்ளாத பேக்கரி சாரதி வண்டியை முன் நகர்த்திய போதே இப் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் இது தொடர்பாக சம்மாந்து பொலிஸ் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.