போராட்டத்திலிருந்து பின்வாங்கப்போவது இல்லை அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று வெள்ளிகிழமை 33 வது நாளாக தொடர்ந்து காரைதீவில் சத்தியாக்கிரகப் போராட்டத்திலீடுபட்டனர். சில பட்டதாரிகள் அவர்களது குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தனர்.
இன்று எந்த முன்னேற்றமும் தென்படவில்லை என அம்பாறை மாவட்ட வேலையற்றபட்டதாரிகள் சங்கத் தலைவர் ஏ.எச். ஜெசீர் தெரிவித்தார்.
காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே மூவின பட்டதாரிகளும் தொடர்ந்து 33 நாட்கள் போராட்டத்திலீடுபட்டும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லையனெ அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
எனினும் நிரந்தரமான தீர்வுகிட்டும் வரை நாம் போராட்டத்திலிருந்து பின்வாங்கப்போவது இல்லையெனவும் அவர்கள் கூறினர்.