போலி சாதனங்களை கண்டறிய சில டிப்ஸ்: இனியும் ஏமாறாதீர்கள்

பல்வேறு சிறு நிறுவனங்களும் போலி சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் போலி சாதனங்கள் பார்க்கவும் பிரான்டெட் போன்றே காட்சியளிப்பதால் பலரும் பிரான்டெட் என்ற நம்பிக்கையில் போலி சாதனங்களை வாங்கி ஏமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மலிவு விலையில் கிடைக்கும் சாதனங்களின் விற்பனை அதிகமாக இருக்கிறது. மலிவு விலையில் கிடைக்கும் சாதனங்கள் நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதோடு சாதனத்தை மிக விரைவில் பாழாக்கி விடும். இவ்வாறான பாதிப்புகளில் சிக்காமல் போலி சாதனங்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்..
பேக்கேஜிங் ஊஷார்:
பிரான்டெட் நிறுவனங்களின் சாதனங்களில் ஒவ்வொரு அம்சமும் கவனமாக கட்டமைக்கப்படும். இது எல்லாவற்றிலும் பொருந்தும் என்பதால் சாதனத்தின் பேக்கேஜிங் உட்பட அனைத்துமே கச்சிதமாக இருக்கும். இதனால் பேக்கேஜிங்கில் ஏதேனும் சொதப்பல் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
யூஸர் மேனுவல்:
நீங்கள் வாங்கும் சாதனத்தின் யூஸர் மேனுவலில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி அந்நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் மொழியாகவே இருக்கும். ஒருவேளை யூஸர் மேனுவலில் உங்களுக்கு புரியாத வேற்று நாட்டு மொழி பயன்படுத்தப்பட்டிருந்தால் அது போலியாகவோ அல்லது மற்ற நாட்டில் இருந்து எடுத்து வரப்பட்டதாகவோ இருக்கும்.
கட்டமைப்பு:
சாதனங்கள் எந்தளவு உறுதியாகவும், கச்சிதமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை உறுதி செய்யலாம். சில போலி சாதனங்களில் சிறு கோளாறுகள் இருப்பின் அது நிச்சயம் போலியானது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
சின்னம்:
சாதனங்கள் எந்தளவு உறுதியாகவும், கச்சிதமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை உறுதி செய்யலாம். சில போலி சாதனங்களில் சிறு கோளாறுகள் இருப்பின் அது நிச்சயம் போலியானது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
சின்னம்:
சார்ஜர்களை வாங்கும் போது அவை சாக்கெட்டில் பொருந்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். பிரான்டெட் நிறுவனங்களின் சார்ஜர்களில் சிறப்பான வடிவமைப்பு, முறையான காப்பு (insulation) வழங்கப்படும்.
கணெக்டர்:
 பிரான்டெட் கணெக்டர்களின் அளவு நம் சாதனத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். போலி சாதனங்களில் கணெக்டர்கள் சீரற்ற முறையிலோ அல்லது வழக்கத்தை விட பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கும். இதை வைத்து போலி சாதனங்களை எளிதாக கண்டறிந்து கொள்ள முடியும்.