மக்கள் வங்கியின் மூத்த பிரஜைகளுக்கானஅதிஸ்டசாலி திருமதி பரமலிங்கம் செல்வநாயகி!

மக்கள் வங்கியின் மூத்த பிரஜைகளுக்கான பரிணத மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் நாடளாவிய ரீதியில் 5 தினங்கள் தாய்லாந்து புனித பயணத்தை மேற்கொள்ள 10அதிஸ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.அதேவேளை 25ஆயிரம் ருபா பணப்பரிசை நாடளாவியரீதியில் 100 அதிஸ்டசாலிகள் பெறுகின்றனர்.
இந்தஅடிப்படையில் மக்கள்வங்கியின் 13 கிளைகளைக்கொண்ட அம்பாறை மாவட்டத்திலிருந்து ஒரேயொருவர் தாய்லாந்துபுனித பயணத்திற்கும் 10பேர் 25ஆயிரம் ருபா பணப்பரிசையும் பெறத் தெரிவாகியுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 13கிளைகளுள் காரைதீவுக்கிளைக்கே அந்த அதிஸ்டம் இம்முறை கிடைத்துள்ளது. காரைதீவு மக்கள்வங்கிக்கிளையைச்சேர்ந்த திருமதி பரமலிங்கம் செல்வநாயகி என்ற ஓய்வுநிலை அதிபர் ஒருவரே தாய்லாந்துப்பயணத்திற்குத் தெரிவாகியுள்ளார். இதே கிளையில் மா.வடிவேல் என்பவருக்கு 25ஆயிரம் பணப்பரிசும் கிடைத்துள்ளது.
இதனை காரைதீவு மக்கள்வங்கிக்கிளை முகாமையாளர் திருநாவுக்கரசு உமாசங்கரன் உறுதிப்படுத்தினார்.இவர்களுக்கான பரிசுச்சான்றிதழை மக்கள்வங்கியின் அம்பாறைப்பிராந்திய முகாமையாளர் கபிலதிசாநாயக்க உதவிப்பிராந்திய முகாமையாளர் அலியார் சம்சுதீன் ஆகியோர் வெள்ளியன்று காரைதீவுக்கிளையில் முகாமையாளர் திருநாவுக்கரசு உமாசங்கரன் தலைமையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.

கடந்தவருடம் அக்டோபர் மாதம் 1ஆம் திகதி இடம்பற்ற உலகமூத்தோர் தினத்தை தொனிப்பொருளாகக்கொண்டு ஒக்டோபர் 1முதல் டிசம்பர் 31வரை நடாத்தப்பட்ட பரிணத்தசேமிப்புத்திட்டத்தின் அடிப்படையிலான குலுக்கலில் இவ் அதிஸ்ட்சாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்திற்கான இப் புனித சுற்றுலா 4 இரவுகளுடன்கூடிய 5 நாட்களைக்கொண்டதாகும். இப்பயணம் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.