மட்டக்களப்பு வைத்தியசாலையில் டெங்குக் காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு !

டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி ஞாயிற்றுக்கிழமை (3) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்லடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கூட்டுறவுத் திணைக்களத்தின் கணக்காய்வுப் பிரிவில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிவந்த எஸ்.ஸ்ரீகாந்த் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

டெங்குக் காய்ச்சல் காரணமாக இவர் சில தினங்களாக தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். டெங்குக் காய்ச்சல் காரணமாக இவருடன் சேர்த்து இதுவரையில் மட்டக்களப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.