மீண்டும் வருகிறது நோக்கியா 3310

அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட செல்பேசியான நோக்கியா  3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

செல்பேசி வரலாற்றில் நெகிழ்திறன் கொண்ட செல்பேசியாக நோக்கியா 3310 திகழ்கிறது.

2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த செல்பேசி மாடல் வெளியானது.

இதன் நீடித்த பேட்டரி பாவனை மற்றும் எளிதில் உடையாத வடிவம் காரணமாக மக்கள் இதனைப் பெரிதும் விரும்பியதுடன், இன்றும் நினைவில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் வெளியாகவுள்ள இந்த செல்பேசியினை 59 யூரோக்களுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழமைபோல், கடிகாரம், கால்குலேட்டர், ரிமைன்டர் ஆகிய வசதிகளுடன் நான்கு விளையாட்டுக்களும் இந்த செல்பேசியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதியரக ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் தோல்வியைத் தழுவிய நோக்கியா நிறுவனம், தமது பழைய மாடல்களை மீண்டும் களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.