யாஹுவின் புதுப்பெயர் இதுதான்….

பிரபல யாஹு நிறுவனம் தனது பெயரை அல்டாப்பா என பெயர் மாற்றம் செய்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் பதவி விலக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல யாஹு நிறுவனம் இணைய தேடு பொறி , மெயில் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு யாஹுவில் மெயில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்களின் தகவல் பெருமளவில் ஹேக்கர்கள் மூலம் திருடப்பட்டது. இதனையடுத்து இந்த நிறுவனம் தங்களது செல்வாக்கை உயர்த்தும் பொருட்டு யாஹு.ஐஎன்சி என்ற பெயரை அல்டாப்பா .ஐஎன்சி என பெயர் மாற்றம் செய்துள்ளது. யாஹு வின் இணையதளங்கள் அனைத்து அல்டாப்பா என்று மாற்றப்பட இருக்கிறது. மேலும் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநராக இருக்கும் மரிசா மேயரும் , மேலும் அந்த நிறுவனத்தின் ஐந்து முக்கிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களும் பதவி விலக இருப்பதாகவு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் எரிக் பிரிண்ட தலைமை செயல் இயக்குநராக பதவி ஏற்பார் என்றும் ஏதிர்பார்க்கப்படுகிறது.