ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்தில் சத்துருக்கொண்டான் பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய துரையப்பா என்பவரே உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்

கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று கொண்டிருந்த குறித்த ரயில் நேற்று அதிகாலை 5:15 மணியளவில் ஏறாவூர் ரயில் நிலையத்தை அண்மித்தபோது இவ் விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த வயோதிபர் தண்டவாளத்தில் பயணித்தமை காரணமாகவே இவ் அனர்த்தம் நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.