லண்டனில் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ – இலங்கையர்களுக்கு பாதிப்பா?

மேற்கு லண்டனிலுள்ள 27 மாடி வீட்டுத்தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக கட்டடம் முழுமையாக எரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அனர்த்தம் ஏற்பட்ட கட்டடத்தொகுதியில் இலங்கையர்கள் இருந்தார்களா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக தகவல் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரையில் ஆராய்ந்த தகவல்களுக்கமைய இலங்கையர்கள் இருந்தார்கள் என்பதற்கு தகவல்களும் பதிவாகவில்லை என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அதிகாலை 27 மாடி கட்டடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இதுவரையிலும் அந்த தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணபை்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டடத்திற்குள் பலர் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.