லீக் போட்டியில் விவேகானந்தா விளையாட்டு கழகம் வெற்றி

இம்ரான் விளையாட்டு கழகம் நடத்தும் 2017 ம் ஆண்டுக்குஉரிய( Ipl ) தொடரின் மற்றும் ஒரு போட்டி இன்று நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் விவேகானந்தா விளையாட்டுக்கழகம் மற்றும் நிந்தவூர் லகான் விளையாட்டுக்கழகம் ஆகியன மோதின. இப் போட்டியில் 14 ஓட்டங்களால் விவேகானந்தா விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.

ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா அணியினர் 20 பந்து வீச்சு ஓவர்களில் 169 ஓட்டங்களுக்கு 7விக்கெட்களை இழந்தனர். துடுப்பாட்டத்தில் கஜேந்திரா 53 டினஸ்ரன் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லகான் 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 14 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

பந்து வீச்சில் டினஸ்ரன் 4 விக்கட் கைப்பெற்றினார் .

இன்றைய போட்டியின் சிறப்பாட்ட வீரராக 53 ஓட்டங்களையும் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றிய கஜேந்திரா தெரிவானார்.

தகவல்-விவேகானந்தா விளையாட்டு கழகம்