வளத்தாப்பிட்டியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு

2016ம் ஆண்டிற்கான கல்விப் பொது சாதாரண தர பரீட்சையில் சித்தியை பெற்று வளத்தாப்பிட்டி ஊருக்கு சிறப்பை ஈட்டிக்கொடுத்த மாணவ மாணவிகளை பாராட்டும் நிகழ்வு அண்மையில் வளத்தாப்பிட்டியில் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் போது ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பினுடைய கிழக்கு மாகாண பணிப்பாளர் கி.ஜெயசிறில் கலந்து சிறப்பித்ததோடு தனது உரையிலே மாணவர்கள் வறுமையை கல்விக்கான தடையாக கருதக்கூடாது என்பதோடு எமது மண்ணின் தனித்துவம் பேனப்பட அற்றுக்கான அடையாளங்களை அமைக்க வேண்டும் அதாவது காரைதீவுக்கு விலாசமாக திகள்பவது முத்தமிழ் வித்தகரின் உருபச்சிலை அதேபோல் எமது கிராமத்தின் விலாசத்துக்காக பெரியார்களின் சிலைகளை நிர்மானிக்க வேண்டும் என்றதோடு இந்த உடம்பானது பாவனைக்குதவாத பாதணினையை விட மதிப்புக்குறைந்தது என்பதை கதை ஒன்றின் மூலமாக விழக்கியதோடு அவ்வாறான உடம்பை கொண்டு வாழ்நாளிலே சேவைகளை செய்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் எனக்கூறினார்.

இவ்நிகழ்வின் போது எமது கிராம சகோதரர் செல்வன்.கமலேந்திரன் மற்றும் அவரது நண்பர்களினால் ஆலய வசந்த மண்டப பணிக்காக ரூபா 2 லெட்சம் உதவியாக வழங்கப்பட்டது.